மனசாட்சி முன் மண்டியிட்டுப்பார்

அளவில்லா ஆசை அத்துமீறும்போது
தீஞ்செயல் திசை திருப்பும்போது
வஞ்சகம் வலை விரிக்கும்போது
துரோகஎண்ணம் தலை தூக்கும்போது
கள்ளம் கண் வைக்கும்போது
குரோதம் கொந்தளிக்கும்போது
காமத்தீ பற்றும்போது
கண்மூடி என் முன்னே வா
சிந்தையில் ஊறியது கள்ளா தேனா
தெரியவைப்பேன்
புத்தி சொல்லும் அறிவுரையை
வெறும் செய்தியாக்கு நான் உரைக்கும்
வழிமுறையை உறுதியாக்கு
அறிவு சார்ந்து செயல்படுவதை விட
மனசு சார்ந்து முடிவு எடுத்தால்
மக்களும் வாழ்த்தப்பெறுவாய்
மகேசனாலும் ஆசிர்வதிக்கப்படுவாய்
மண்டியிடு மனிதா மனசாட்சிமுன்
வாழ்வு வளம்பெறும் .

எழுதியவர் : vincy (25-Jun-20, 10:53 pm)
சேர்த்தது : vincy
பார்வை : 114

மேலே