ஊரடங்கி - உயிரடங்கி
ஊரடங்கி
ஊரடங்கி
உயிரடங்கி போனதே!
உயிரடங்கி
உயிரடங்கி
உணர்வடங்கி போனதே!
உணர்வடங்கி
உணர்வடங்கி
உரிமையடங்கி போனதே!
உரிமையடங்கி
உரிமையடங்கி
விடியலடங்கி போனதே!
விடியலடங்கி
விடியலடங்கி
இருளடங்கி போனதே!
இருளடங்கி
இருளடங்கி
வாழ்வடங்கி போனதே!
வாழ்வடங்கி
வாழ்வடங்கி
மனமுடங்கி போனதே!
மனமுடங்கி
மனமுடங்கி
துயரடங்கி போனதே!
துயரடங்கி
துயரடங்கி
தொன்மையடங்கி போனதே!
தொன்மையடங்கி
தொன்மையடங்கி
உண்மையடங்கி போனதே!
உண்மையடங்கி
உண்மையடங்கி
நீதியடங்கி போனதே!
நீதியடங்கி
நீதியடங்கி
நம்பிக்கையடங்கி போனதே!
- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி