பெண்ணே பேசிவிடு

மூடிய மொட்டாய் இருந்து என்ன பயன்
மூடிய மொட்டவிழ்ந்து இதழ்கள் விரிந்தால்
மாமலராகும் மணம்பரப்பி மண்ணோர் விரும்ப
மலர்விழியே நீயும் கொஞ்சம் மௌனம்
துறந்து வாய்த் திறந்து பேசிவிடு
பூட்டிய உந்தன் செவ்விதழ்கள் விரிய
அதனுள் பூத்த முல்லை மொட்டாய்
உந்தன் பற்கள் காண

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-20, 2:44 pm)
பார்வை : 304

மேலே