காதல் என்ன ஜடப்பொருளா
காதல் என்ன ஜடப்பொருளா
'அளவீட்டு ஜாடியில் ' அளக்க
ஆனந்தத்தில் பெருக்கெடுக்க
அள்ளமுடியா அளவு
பொங்கி வழிந்திடும்
சோகம் வந்து வைத்திட
வற்றிய போய்விடும்
நீரில்லா காவிரிபோல்
கண்ணுக்கு புலப்படாது
காதல் ஆனால்' கண்ணில்
வந்து இன்பம்போல் காணும்
காவிய கலையாய் ஓவியமாய் '
காதல் என்ன ஜடப்பொருளா
'அளவீட்டு ஜாடியில்' அடைக்க
காதலை அறிவது
உருவில்லா மனமும் உள்ளமும்
காதல் அருவம்
ஆனால் உருவம் கொண்டு
ஆனந்தமும் சேர்க்கும்
சிலபோது ஆடியும் வைக்கும்