என்னருகே நீயிருந்தால்

காதல் வார்த்தைகள்
கவிதையாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்...

ஒவ்வொரு வண்ணமும்
ஓவியமாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்....

வானம் என்னுள்
வசப்பட்டுப் போகும்-
என்னருகே நீயிருந்தால்....

பூக்களின் வாசம்
சுவாசமாய் மாறும்-
என்னருகே நீயிருந்தால்....

நிலவின் குளிர்ச்சி
நீங்காமல் என்னுடனிருக்கும்-
என்னருகே நீயிருந்தால்....

அன்பே...
பூக்கள் மோதியே -
புண்பட்டுப்போகுமென் உள்ளம்...

என்னை நீ பிரிந்தால்....!

எழுதியவர் : Renu (6-Jul-20, 7:19 am)
சேர்த்தது : renu
பார்வை : 463

மேலே