வேறு மதம்போனவிதம்

வேறுமதம் போனவிதம்

நாடியெந் தாயும் கற்பித்த
செம்மொழி யேநம் தமிழறிவேன்
ஈடிலா ஈசனை கற்பிக்கா
எனைத்தறு தலையாய் விட்டாளே
தேடிநான் தெய்வம் தொழவில்லை
வீதியில் தேருலா வரப்பார்த்தேன்
ஈடிலா ஈசனைக் குடியப்பனால்
விட்டு மாறினோம் வேறுமதம்

எழுதியவர் : பழனிராஜன் (6-Jul-20, 11:45 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 128

மேலே