அவள் மௌனம்
இன்று ஏனோ அவள் பேசா மடந்தையானாள்
ஒன்றாய் பார்வையால் சேர்ந்த பரிச்சயத்தில்
ஏனேன் இப்படி என்று நான் கேட்க
அதற்கவள் ஊமைமொழியில் இன்று மௌனம்
அதனால் என்றாள் நானோ விடுவதாய் இல்லை
அவளை நெருங்கினேன் செல்லமாய் கிள்ளினேன்
துள்ளியோடினாள் புள்ளிமான்போல என்னைப்பார்த்து
புன்னகைத்தாள் சிரித்தாள் கண்ணின் அசைவில் அபிநயமும்
ஆனால் விட்டுக்கொடுக்கவில்லை மௌனத்தை இப்போது
அவளை முழுவதுமாய் புரிந்துகொண்டேன் நான்
என்னவள்இவள் திடமான மனமுடையாள் அதுவே
மென்மையே உரித்தான பாவையே உன்னுள் இப்படியோர்
வைராகியமும் உண்டா அப்பப்பா என்று வியந்து