மௌனத்தில் வாசித்த காதல் வரவேற்புரை
உதிர்த்தாள் ஓர் புன்னகை
அது உவமைக்கு அப்பாற்பட்ட ஓர் கவிதை !
இரு விழி இமைகள் சற்று கவிழ்த்தாள்
அது மௌனத்தில் வாசித்த காதல் வரவேற்புரை !
இதழ்கள் திறந்து இரண்டு சொற்கள் உதிர்த்திருந்தால்
இப்படி இடையே நின்றிருக்குமா என் கவிதை ?