காதல்🌹 சங்க கால காதல்

காதல்🌹 (சங்க கால காதல். )

இரவு கூட உறங்கி விட்டது.
காளை அவனுக்கு உறக்கம் வரவில்லை.
அவன் மனதில் காதல் தீபம் ஏற்றிய அவள்
அவன் உறக்கத்தை கெடுத்தாள்.
கண்களை மூடினாலும் அவள், கண்களை திறந்தாலும் அவள்.
நடு சாமம்.
நிலவு வெளிச்சம்.
முடிவு எடுத்தான்.
அவளை பார்த்தே ஆக வேண்டும்.
எங்கோ நரி ஊளை இட,
இவன் பூனை என நடந்தான்.
காற்று நன்றாகவே வீசியது.
கன்னி அவளின் வீடு அடைந்தான்.
கதவை தட்டுவது தவறாக போய்விடும்.
மெதுவாக சாலரத்தை திறந்தான்.
அழகி அவள் ஆனந்த சயணதில்.
அவள் தோற்றத்தை கண்டு பிரம்மித்தான்.
நிலவின் வெளிச்சத்தில்
அவள் தாமரை முகம் பளிச்சென்று தெரிய
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினான்.
எப்படி இவளை எழுப்புவது.
மரகுச்சி ஒன்றை எடுத்து சாலரத்தின் வழியே அவள் தோள்பட்டையை செல்லமாக தட்டினான்.
ஆழ்ந்து உறக்கத்தில் இருந்த அவள் புரண்டு படுத்துவிட்டாள்.
இப்போது அவள் முகம் இவன் காண இயலாது.
மீண்டும் ஒரு முறை அவ்வாறே முயற்சி செய்ய
திடுகிட்டு எழுந்த அவள்
சுதாரித்து, அவனை அடையாளம் கண்டு கொண்டாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்த அவள் வாசலுக்கு வந்தாள்.
பளிங்கு சிலையே
உன்னை காண ஆசையாய் ஓடோடி வந்தேன்.
இனி உன்னை பிரித்து ஒரு நொடியும் என்னால் இருக்க இயலாது.
எல்லாம் சரி, நடு சாமத்தில் இப்படி திருடணை போல் என்னை பார்க்க வருவது முறையா?
அம்மா விழித்து கொண்டால் என் நிலைமையை சற்று யோசியுங்கள்.
ஏன் ஊரார் யாரேனும் நோக்கினால் மானம் கப்பல் ஏறிவிடும்.
நான் உன் வருங்கால கணவன் தானே.
அதில் மாற்று கருத்து இல்லை என்றாலும் எதற்கும் ஒரு வரைமுறை இருக்குதல்லவா.
மங்கையே என்னை மன்னித்து விடு.
மல்லிகை பூவே மன்னித்து விடு
மாணிக்கமே மன்னித்து விடு.
உன் உறக்கத்தை கெடுத்த இந்த அவசரகாரனை மன்னித்து விடு.
மன்னிப்பு எல்லாம் வேண்டாம்.
மார்கழி முடிந்து தை திங்கள் நம் திருமணம்.
அது வரை நீங்கள் காத்திருப்பது சாலசிறந்து.
நீங்கள் என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பும் முன் நீங்களும், நானும் என் கனவில் காதல் பாட்டு பாடி மகிழ்ந்திருந்தோம்.
தக்க சமயத்தில் என் கனவை கலைத்துவிட்டீர்.
கள்ளி, கள்ளி ஏன் ஆசையை மனதில் பூட்டுகிறாய்.
இதோ உன் தலைவன் நிஜத்தில் உன் எதிரே.
வா என் அழகிய, என் தலைவியே, உன் கனவை உண்மை ஆக்குவோம்.
அன்பரே நேரம் கடக்கிறது.
தயவு செய்து நீங்கள்...
வண்ண மயிலே நிச்சயம் சென்றுவிடுகிறேன்.
ஒரு விண்ணப்பம்.
ஒரே ஒரு விண்ணப்பம்.
என்ன அது?
தவிக்கின்ற வாய்க்கு ?
தண்ணீர்.
பசிக்கு?
சோறு.
என் ஏக்கதிற்கு?
நான்.
புத்திசாலி. நீ மிகவும் புத்திசாலி.
ஒரு முறை உன்னை கட்டி அனைத்து, உன் இதழ்தனில் என் உதடுகளால் கவிதை எழுதவா.
எனக்கும் ஆசை தான் என் மன்னவனே.
ஆனால் இன்னொரு தருணத்தில் அது சாத்தியம்.
ஏன் இப்போது. இங்கு தான் யாரும் இல்லையே.
என் அம்மா.
அவர்கள் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில்.
வா கண்ணே வா
என் அருகே வா
என் ஆசையை நிறைவேற்று.
இல்லை, வேண்டாம்.
வெட்கபட வேண்டாம்.
உன் தலைவன் அழைக்கிறேன் வா.
தலைவனே, என்னை மன்னியுங்கள்.
நாம் அவ்வாறு கூடி குலவினால், என் தங்கை அதை பார்ப்பாள்.
இப்போது கூட நாம் பேசுவதை செவி கொடுத்து கேட்டு கொண்டு இருக்கிறாள்.
தங்கையா?
ஆம் ஆதோ தெரிகிறதே " புன்னை மரம்" அவளே என் தங்கை.
நான் ஒரே மகள் என்பதால் எனக்கு தங்கையாக இந்த புன்னை மரத்தை நான் என்று பிறந்தேனோ அன்றிலிருந்து இன்று வரை பாவிக்கிறேன்.
உன் மேலான ஒழுக்கம்
என்னை புல்லரிக்க வைக்கிறது.
தமிழ் மகளே பண்பாட்டை பாதுகாக்கும் என் வருங்கால மனைவியே
சென்று வருகிறேன்.
உன் நினைவில் என் நேரத்தை கழிப்பேன்.
தற்காலிக பிரிவு என்னை உன்னிடத்தில் இருந்து தனிமை படுத்தினாலும்
தை மாதம் தாலியுடன் வருவேன்.
தையல் உன் கரம் பிடிப்பேன்.
தரமான என் தலைவா
உன்னை நினைத்து நூலாக நான் வாடுவேன்.
அந்த அற்புத தினத்தை நினைத்து ஏங்குவேன்.
இப்போது பிரிவோம்
விரைவில் சந்திப்போம்.
சங்கமிப்போம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (16-Jul-20, 10:47 pm)
சேர்த்தது : balu
பார்வை : 181

மேலே