புத்தன் வீட்டுப் பூக்கள் ---தொடர் 27---

புத்தன் வீட்டுப் பூக்கள் - ௨௭

261. யார்? வளர்த்தாலும் அழிவை மட்டுமே கொடுக்கக் காத்திருக்கும் பகை.

262. தன்னைப் புத்திசாலியாய் நினைத்துக் கொண்டே வாழ்வதை விட
பெரும் முட்டாள்தனம் எதுவும் கிடையாது.

263. அன்புக்கு ஏங்கும் போதும் அடுத்தவருக்குத் தீங்கு செய்து
மிருகத்திலும் கொடிய மிருகம் நான் தான் என்பதை உறுதிப் படுத்துகிறாய்.

264. ஒவ்வொரு நாளையும் ஆசானாக ஏற்று மாணவனாகக் கற்றுக் கொண்டு கடந்து செல்
நேற்றைய வாழ்வை விட இன்றைய வாழ்வில் சுகம் இருப்பதை நீயே சொல்வாய்.

265. கோவில் சிலையோ? வாசல் படியோ? கல் ஒன்று தான்
இருக்கும் இடமும் மதிக்கும் தரமும் வேறு
எதுவாக மாறப் போகிறோம் என்பது நம் கையில்.

266. நல்லதோ? கெட்டதோ?
உன் நம்பிக்கையும் உன் செயல்களும்
அதற்கான இடத்திற்கு உன்னை அழைத்தே செல்லும்.

267. அதிகார நிலத்தினில் நேர்மை என்ற நீரை உறிஞ்சிக் குடித்துவிட்டு
வேர்பிடித்துக் கிடக்கிறது ஊழல் என்ற பெருங்காடு.

268. ஒரே பொருள்
ஒருவருக்கு அதிசயமாய் இருக்கிறது
ஒருவருக்கு அவசியமாய் இருக்கிறது.

269. ஊருக்காக உழைப்பவன் பேருக்காக வாழ்வதில்லை
பேருக்காக உழைப்பவன் ஊருக்காக வாழ்வதில்லை

270. பழைய பொருளைச் சரிசெய்து பயன்படுத்தி வாழ்ந்தது ஒரு தலைமுறை
சிறு பழுதானாலும் தூக்கி எறிவதைப் பழக்கமாக வைத்திருக்கிறது இந்தத் தலைமுறை.

...இதயம் விஜய்...
..ஆம்பலாப்பட்டு..

எழுதியவர் : இதயம் விஜய் (17-Jul-20, 8:16 am)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 155

மேலே