என் தேசமே ஏன் தேசமே ராணுவ வீரனின் தாய் மற்றும் மனைவி நகைக்காக கொலை
ஏதோ இரக்கமற்ற மனிதர்களின் இடையில் வாழ்வதாக
இதயம் உரக்க உரைக்கிறது .................
ஊரைவிட்டு உயிராய் நேசித்த உறவுகளை விட்டு
தேசம் காக்க விழித்துக்கொண்டிருக்கும்
காவல் தெய்வத்தின் வீட்டிற்க்கே
காவல் இல்லையா ?
ஜாதி மதம் மொழி கடந்து
எல்லோருக்குமாய் எல்லையில் காவல் காக்கும்
காவலனுக்கு தொல்லைகள் தருமோ இந்த தேசம் .............
பணத்திற்காகவும் நகைக்காகவும்
இரண்டு உயிர்களை கொன்று
தியாகத்தை கொச்சை படுத்தியிருக்கிறதா
இந்த இரக்கமற்ற சமுதாயம் ............
கொள்ளைக்காரர்களும் கொள்ளைக்காரர்களும்
எல்லைக்காரன் இதையத்திலா
இடியை இறங்குவார்கள் ..................
இலக்கு தவறாமல் தாக்கும்
ஏவுகணை தாக்குதலை முறியடித்த வீரனுக்கு
இதயமே தாங்காத துயரம் எதற்கு ............
என் தேசமே
இந்த கொலைகாரர்களுக்கும் கொள்ளைக்காரர்களும்
மறக்க முடியாத மரண தண்டனை கூட கொஞ்சம்தான் .................
அந்த ராணுவ வீரனின்
குடும்பத்தை சிதைத்த அந்த கொடூரக்காரர்களை
அவன் கையிலே ஒப்படைத்து விடுங்கள்
அவனே கொள்ளட்டும் ,
இவர்கள் எதிரியைவிட மோசமான துரோகிகள் ................