இதழ்களின் தண்டனை
![](https://eluthu.com/images/loading.gif)
பிழையாய் எதையும்
சொல்லி விட்டால்...
பின் உடனே உணர்ந்து
இதழ் கடிப்பாய் - வெகு
இயல்பாக..!!
தவறுகள் உன்னுடையது.!
ஆனால்...
தண்டனை மட்டும்
இதழ்களுக்கா.!?
கேலியாய் அவ்வப்போது
எதையாவது பேசிவிட்டு
பின்...
ஒய்யாரமாக நீ
உதடுகள் சுழிக்கின்றாய்..!!
உன்னிடம் சிக்கிக்கொண்டு
படாதபாடு படுகிறது போ.!
உன் இதழ்கள்.!!!
///---///---///
மருத கருப்பு.