காதல்,காதல், காதல் 🌹💕♥️💞

காதல்,காதல், காதல் 🌹💕♥️💞

கொடியிடை உடையவளே
உன் கோமகன்
உன் காதல் முடிவுக்காக
கால் கடுக்க நிற்கிறேன்
மாநகர பேருந்து போல்
ஏன் இந்த தாமதம்
கோபம் தான்
உன் மேல்
சின்ன கோபம்
உன் வேல் விழியில் மை
தீட்டுவதால் இந்த தாமதமா
உன் கார்மேக கூந்தல் முடிவதால்
இந்த தாமதமா
உன் கொவ்வை இதழில் வண்ணம் தீட்டுவதில் ஏற்பட்ட தாமதமா
ஒரு வேளை என்னைக் காண நீ தமிழ் பெண் போல் அலங்காரம் செய்தவதால் விளைந்த தாமதமா
அதோ வந்து விட்டாள்
என் ஆனந்த பைரவி
ஆம் அவளே தான்
அலங்கார ஊர்வலம் போல் வருகிறாள்
புடவை தான் பெண்களுக்கு
என்ன ஒரு அழகு
பிரம்மன் இவளை
படைப்பதற்கு முன்
ஸ்காட்ச் அருந்தியிருப்பானோ
இப்படி ஒரு அழகு பெட்டகத்தைப் படைத்துவிட்டானே படுபாவி
அவனை எவ்வளவு
பாராட்டினாலும் தகும்
கட்டாயம் ஆஸ்கார் கொடுக்க வேண்டும்
அவனுக்கு அட்லீஸ்ட்
பாரத் ரத்னாவது தர வேண்டும்
நெருங்கிவிட்டாள் என்னை
வானத்தில் உதிர்ந்த நட்சத்திரம்
வீதியில் ஒரு தேவதை போல்
நடந்து வந்தாள்
ஒரு கோடி மலர்கள் பார்த்த பரவசம் எனக்குள்
பக்கத்தில் வந்துவிட்டாள்
எனக்கு பில்டிங் ஸ்டிராங் பேஸ்மண்ட் கொஞ்சம் வீக்
பயம் கலந்த சந்தோஷம்
சற்றும் எதிர்பாராது அவள் அருவியன பேசினாள்
"நீர் என்ன கற்கால ஆடவரோ
அல்லது புறநானூற்று நாயகனோ
எஸ் எம் எஸ் , வாட்ஸ்அப், இருக்க என்
தோழியிடம் அனுப்பியுள்ளீர்
உங்கள் காதல் கடிதத்தை
உண்மையில் உங்கள் கவிதை மிக அருமை
அனிச்சம் மலர்க் காம்போடு என் தலையில் சூடினால்
அந்த காம்பின் எடை
தாங்காமல்
என் இடை ஒடிந்துவிடுமோ
ரதியை விட நான் அழகியோ
நான் ஆயிரம் நிலவோ
என் சிரிப்பு உங்கள் செல் போன் காலர் டியூனோ
ஐஸ்வர்யாராய் என்னிடம் பிச்சை வாங்க வேண்டுமோ
என் புருவம் வில் அதில் என் விழி அம்பு
அது உங்களைத் தாக்கியதோ
மொத்தத்தில் நான் உங்களுக்கு வீணை
மீட்டுவதற்கு நீங்கள் தயார்
அப்படி தானே அன்பரே
பேசுங்கள் நல்லவரே
பேச்சு வரவில்லையா
பேச முடியவில்லையா
ஏன் மவுனம்
எதற்கு மவுனம்
சரி நானே என் முடிவை
சொல்கிறேன்
காரல் மார்க்ஸ் மனைவி யார் ?
இந்த கேள்விக்குப் பதில்
சொல்லுங்கள்
உங்கள் காதலை ஏற்கிறேன்
நிச்சயமாக அவன் கேட்டான்
உண்மையாக அவள்
உரைக்க
நான் காரல் மார்க்ஸ் நீ என் ஜென்னி என்றான்.
- பாலு.

எழுதியவர் : பாலு (29-Jul-20, 11:34 pm)
பார்வை : 252

மேலே