கண்ணீர் கண் நீர்
உள்ளத்தில் துக்கம் பீறிட்டால்
கண்களில் வழியும் கண்ணீர்த்துளிகள்
ஆனந்தத்திலும் கண்களை நிரம்பும் கண்ணீர்
கண்ணீரில் பேதமில்லை அது கடல் நீர்போல்
உப்பு கரிக்கும் ......துக்கம்.இன்பம் என்பவை
உள்ளத்தின் உணர்வுகளின் முகப்பிரதிபலிப்பு
இவை கண்ணீரல்ல கண்ணீர் கண் நீரே!