நீரில் பிரதிபலிக்கும் சூரிய கிரணங்கள்
நீரில் பிரதிபலிக்கும்
சூரிய கிரணங்கள்
அலைகளில் அசையும்
அழகிய ஓவியமாக ...
கரையில் சிரிக்கும்
மலர்கள் எல்லாம்
தலையசைக்கும் ரசிகர்களாக.....
மௌனப் புன்னகை இதழ்களில் விரிய
பாராட்டி பரிசளிக்க வந்தாய் நீ
மாலையின் அழகாக !