வண்டார்க்கும் தேன்மலர்க் கூந்தல் எழிலினி

வண்டார்க்கும் தேன்மலர்க் கூந்தல் எழிலினி
கொண்டாடும் நற்றமிழ்க்கூ டல்நகர் நாயகி
மீன்பறக் கும்கொடி நாட்டுமுத்துப் புன்னகையாள்
தேன்சுவைப் பூந்தமிழ்ப்பா வை !

வண்டார்க்கும் தேன்மலர்க் கூந்தல் எழிலினி
கொண்டாடும் நற்றமிழ்க்கூ டல்நகர் நாயகி
மீன்கொடிப் பொன்நாட்டு முத்தழகுப் புன்னகையாள்
தேன்சுவைப் பூந்தமிழ்ப்பா வை !

எழுதியவர் : கவின் சாரலன் (1-Aug-20, 10:15 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே