நித்தம் நித்தம் குளியல்
விதவிதமான குளியல்
பாவத்தைப் போக்க
கங்கையில் குளியல்
பித்து தெளிய
அருவியில் குளியல்
பக்தி பெருக
தெப்பக் குளத்தில் குளியல்
பிறந்தாலும் குளியல்
இறந்தாலும் குளியல்
மற்ற கைகளால் நமக்கு
புழுக்கத்தை போக்க
குளியல்
புற அழுக்கைப் போக்க
குளியல்
உடல் வலியை போக்க
குளியல்
மன புழுக்கத்தைப் போக்க
அர்த்த ராத்திரியில்
குளிக்கும்
ஒரு இளம் விதவையின்
கண்ணீர் தண்ணீரோடு
கலந்து வருவதை
யாரறிவார்.
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.