காதலி

கவிஞன் நான் என் காதலிக்கு
கவிதை ஒன்று எழுதி தரலாம்
என்று நினைத்தேன் காதலுக்கு -அவளைக்
கண்டதும் நான் நினைத்த காதல்
வரிகள் அத்தனையும் அவளாய் மாறி
என் கண்முன் நடனம் ஆட
கவிதா என் காதலியே என்று
கூறி அவளை அருகில் அழைத்தேன்
கட்டியணைத்தேன் முத்தம் தந்தேன்
நீதானே என் காதலி நீயேதான் என்
கவிதையடி என்று பாட்டும் பாடி
கவிதையே அவள் என்றபின் இனி
என் கவிதை எதற்கு காதலுக்கு ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Aug-20, 4:39 pm)
Tanglish : kathali
பார்வை : 149

மேலே