கொஞ்சும் புறாவே என்னை கொஞ்சிடவாடி 555

என்னுயிரே...
உன்னை என் கண்ணுக்குள்
வைத்து இமையாக காக்கிறேனடி...
கண்ணுக்கு இமைகள் மீது
கோபம் கொண்டாலும்...
இமைகள் இமைக்காமல்
இருப்பதில்லை...
நீ என்மீது கோபம்
கொண்டாலும்...
நான் உன்னை
நினைக்க
நினைக்க
மறந்ததில்லை...
என்னுடன் நீ ஊடல்
கொள்ளும் நாட்களில்தான்...
உன்னை அதிகமாகவே
நினைக்கிறேன்...
தவறை நீ உணர்ந்தாள்
என்னை நீ கொஞ்சுவாயே...
அதற்காகவே
ஏங்குகிறேனடி நான்...
உன் ஊடலுக்கு பின்வரும்
கொஞ்சலுக்காகவே...
தெரிந்தும் தெரியாமலும்
பல தவறுகள் செய்கிறேனடி...
கொஞ்சும் புறாவே
என்னை கொஞ்சிடவாடி.....