கலங்கமில்லா உறவுகள் நட்பு 555

***கலங்கமில்லா உறவுகள் நட்பு 555 ***
நட்பு...


நீயும் நானும்
பழகியது தவறில்லை...

அன்பும் பாசமும் அதிகமாக
வைத்ததும் தவறில்லை...


உடன்பிறப்புகளை
போல கண்டிக்கும்...

உரிமை எடுத்து
கொண்டதும் தவறில்லை...

இனங்கள் வெவ்வோராக
பிறந்ததுதான் தவறு...

நீயும் நானும்
ஆண் பெண் என்று...

பார்க்கும் சமூகம்
தவறாகவே பார்க்கிறது...

எப்போதும் உடன்
இருப்பவர்களும் தவறாகவே...

ஆண் பெண் பழகினால்
காதலாகத்தான் இருக்க வேண்டுமோ...


அதில் கலங்கமில்லா
உறவுகள் இருக்க கூடாதா...

நாகரிக வளர்ச்சியென
பெருமை கொள்ளும்...

இன்றைய சமூகத்திலும்
ஆண் பெண் நட்பை...

கொச்சைப்படுத்தித்தான்
பார்க்கிறது
சமூகம் மட்டுமல்ல...

உடன்
இருப்பவர்களும் கூட.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (11-Aug-20, 6:19 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 149

மேலே