அப்பா

கட்டியவள் கருத்தரிக்கையில்
களிப்புறுவான் அக மனதில்..
கட்டியவள் பிரசவிக்கையில்
பரிதவிக்குமிவன் உள்ளம்..
செவிலியர் சிசுவை காட்ட
கண் கலங்கி தன்முகம் மறைப்பான்..
தன் குழந்தை நடை பழகுகையில்
தடுமாறிடின் தவிக்குமிவன் மனது..
நிற்கையிலும் நடக்கையிலும் மல்லாந்து
படுக்கையிலும் நிகழ் காலம் தானறியான்..
பிள்ளைகளின் எதிர்காலம்தனை தன்
விழித்திரையில் தினம் கனவு காண்பான்..
உலக அறிவு மிகுந்திருந்தும் அன்பு
காட்டும் பாடத்தில் அரை வேக்காடிவன்..
பருவ வயது வந்த பிள்ளை காக்க
அண்டியவள் தயவை அவ்வப்போது நாடுபவன்..
அறுபது வயது கடந்திடினும் அயராது
அடுத்த வேலைக்கு போவானிவன்..
ஆண்கள் அழுவதில்லையென்று யாரோ சொல்ல
அத்தனையும் மனதில் அடைப்பவன்...
அறிவு அனுபவம் பெற்று அண்டம் நாம் சுற்றினாலும்
நம் அப்பாவிற்கு இணை அப்பா தான்..
---------------
சாம்.சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (16-Aug-20, 10:16 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : appa
பார்வை : 167

மேலே