இறைவன்
உள்ளான் உள்ளான் என்று சொல்வார்க்கு
உள்ளான் இல்லான் இல்லான் என்பற்கு
இல்லான் உள்ளான் என்பார்க்கு பேரின்பம்
காட்டுவான் அவன் இல்லான் என்பார்க்கு
இல்லாமையிலும் இருப்பவன் நான் என்று
அவர் உள்ளம் மட்டுமே அறியும்
வண்ணம் தனைக் காட்டிக்கொள்பவன் அவனே
என்றும் எங்கும் உள்ளான் இறைவன்