வாழ்த்துக்கள்

வாழ்க வளமாய்!

முகமறியா உறவொன்று
முழுமனதாய் எனைநின்று
முகவரி தேட வைத்திட்டது

புன்னகை பூக்கும்
புகைப்படம் பார்த்திட்டேன்
எங்கோ பார்த்தது போல்
என் நெஞ்சில் ஓர் நினைவு

அழைத்துப்பேசியதில்
அறிந்தது சில
ஆம்....

பிரபஞ்சதுகள்களில்
இவள் ஒரு நட்சத்திரமாய்!
பரமாத்மாவின் பரிச்சயம்
பாந்தமாய் கொண்டவளாய்!

கள்ளமில்லா சிரிப்பொலி
கேட்கிறேன் நான்..
வாய்மொழி யாவிலும்
நல்வார்த்தைகளே நவில்கிறாள்...

இளஞ்சிறு வயதில்
இல்லறம் கண்டு
இன்னல்களே என்றாலும்
இயன்றிட்டு வென்று
இனியும் கடந்திட
என்ன என்பவளாய்...

தான் வந்த பாதையை
முன்வைத்தே வாழ்ந்திடும்
தற்பெருமை கொள்ளாத
தங்கத்தாரகையாய்!

திமிர்பிடித்த திறமைசாலியை
தினம் கட்டி மேய்க்கும்
உன் பொறுமைக்கு வந்தனம்!

இனிவரும் நாட்களும்
அழகிய பொழுதுகளாய்
ஆண்டவன் ஆசிர்வாதம்
அனைத்திலும் நிறைந்திட
நீடுழி வாழ்க பெண்ணே
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்!
அன்புடன் விஜயலட்சுமி.

எழுதியவர் : viji (30-Aug-20, 9:00 pm)
சேர்த்தது : krishna viji
பார்வை : 226

மேலே