முகநூலில் வீரம் காட்டும் அடிமை கோழைகள் நாம் 555
நாம்...
கண்ணில் படாத
கைகளில் சிக்காத காற்றை...
ஐந்து நிமிடம் நிறுத்தினால்
பிணமாகும் உயிரினம் நாம்...
சாதிகளால்
பிரிக்க பட்டு...
மதத்தால் தனிமை படுத்தபட்ட
மிருகங்கள் நாம்...
அநீதிகளை கண்டால்
முகம் காட்டாமல்...
சமூக வலைதளத்தில் பொங்கி
எழும் கோழைகள் நாம்...
கண்ணெதிரே கண்டால் புறமுதுகிட்டு
ஓடும் குள்ளநரி கூட்டம் நாம்...
என் சாதி என் மதமென
முகநூலில் வீரம் காட்டும்...
அடிமை
கோழைகள் நாம்...
என் சாதி என் மதமென
முதிர்கன்னிக்கும்...
இளம் கைம்பெண்ணிற்கும்
மறுவாழ்வு கொடுக்க யோசிக்கும்...
சுயநலமுள்ள கூட்டம் நாம்
நம் மனித இனம்.....
முதல் பூ பெ.மணி.....