நீயார்
காலை முதல் மாலை வரை
கால்களை சக்கரம் போல சுழலவிட்டு
இங்கும் அங்கும் எங்கெங்கோ அலைகிறாய்
ஆசைகள் ஆதங்கங்கள் விருப்பு வெறுப்பு
கட்டுக்கடங்கா எண்ணங்கள் பேர் ஆசைகள்
என்று அத்தனையும் தாங்கி போகின்றாய்
கொஞ்சம் நில்லேன் , நீயார் நீயார்
கொஞ்சமேனும் எப்போதாவது யோசித்தாயா சொல்லு
இப்போதாவது யோசித்துப்பார் நீயார் என்று
நீ என்ன உடலா இல்லை ஆன்மாவா
இதற்கு உந்தன் பதில் என்ன
பதில் கிடைத்தால் கொஞ்சம் எனக்கும்
சொல்வாயா .........நீயார் யாருக்காக அலைகின்றாய்
எதைத்தேடி அலைகின்றாய் எதை சேகரிக்க
யாருக்காக கொஞ்சம் சொல்வாயா நெஞ்சே