குறும்புத் தென்றலே என்னவளை விடு

குறும்புத் தென்றலே உனக்கு ஏனிந்த பொல்லாப்பு
என்னவள் இன்னும் முற்றாத குரும்பை
அவ்வினிமைக் கரும்பை
மலர் விரியும் அரும்பை
என் கண் முன்னே நீ என்ன செய்கிறாய்
அவள் குலுங்கும் முல்லைக் கொடி!
கண்டவுடன் மதிமயங்கி
உன் விருப்பத்திற்கு ஏற்ப
உயர்ந்து தாழ்ந்து தாவி படர்ந்து
அங்கு ஏறுமுகம் இறங்குமுகம்
யாவும் கண்டு இலை அடர்ந்த
மரத்தின் உச்சியின் பெருங்கிளையைக்
கலைப்பது போல அவள் தலை முடியை
பிடித்து பிய்த்து விலக்குகின்றாய்
சந்திரனை மறைக்கும் முகில் போல
அவள் முகத்தை மூடி விளையாடுகின்றாய்
வாயுக்க காரா நீ மச்சக் காரன்
எச்சில் வாயில் ஊறுகிறதடா
உன்னோடு பொறாமை பொறாமையாய் வருகிறது
அஷ்றப் அலி