அம்மா

பத்து வருட குழந்தை இல்லா கஷ்டத்தையும்...
பின் பத்து மாதம் என்னையும்...
பின் குடும்ப சுமையையும்...
பல பேரிடம் பழிச்சொல்லையும்....
இப்படி எத்தனை கஷ்டங்களை சுமந்திருப்பாய்...
என் விரலை பிடித்து நடக்கவும்...
உலகில் உள்ள பந்தங்கள் அனைத்தையும்...
நன்மையையும்....
தீமையையும்...
பேசவும்....
பிறரிடம் நடக்கும் விதத்தையும்....
நீ தான் கற்று கொடுத்தாய்...
சிரிப்பை வரவழைத்தாய்...
பொறுமையையும் முயற்சியையும் கற்று தந்தாய்...
அழுகையையும் தனிமையையும் உணர வைத்தாய்...
அன்பு கலந்த உணவை ஊட்டி விட்டாய்...
குறைவான நேரத்தில் மட்டுமே என்னுடன் இருப்பாய்...
அந்த நேரத்தையும் மகிழ்ச்சியானதாய் ஆக்கினாய்....
எனக்கு உடல் சரியில்லை என்றால் பதறுவாய்...
என்றும் என் பிறந்த நாளை மட்டும் நீ மறப்பது இல்லையே...
அன்று தான் நான் உன்னை முதல் முதலில் அழ வைத்தேன்... இன்று வரை....



இது தாங்க என் வாழ்க்கையும் என் அம்மா வாழ்க்கையும்...


முதன் முதலில் உன் அழுகையை கண்டு உன் தாய் சிரித்த நாள்...
உன் பிறந்த நாள்...
Dr.APJ.Abdul Kalam

எழுதியவர் : Masudu (8-Sep-20, 9:50 am)
Tanglish : amma
பார்வை : 1204

மேலே