காத்திருக்கிறேன் எப்போதும் உனக்காக 555

என்னவளே ...


உன்னை நான் சந்தித்த பிறகுதான்
என்னை நான் உணர்ந்தேன்...

அலைபாய்ந்து என் மனதை நீ
ஒருநிலை படுத்தினாய்...

மனதிற்கு
அமைதியையும் கொடுத்தாய்

மனம்
திறந்து நேசித்தோம்...

மணமாலை
சூடிக்கொள்ள காத்திருந்தோம்...

கல்லுப்பட்ட கண்ணாடி போல
உடைந்தது நம் உறவு...

உன் சந்தேகம்
என்னும் பேயால்...

ஆற்றங்கரையில் காற்றில்
ஆடும் நாணலை போல...

என் மனம் அங்கும் இங்கும்
தத்தளிக்குதடி

கோடையில் வறண்டு
கிடைக்கும் ஆற்றைப்போல...

என் உள்ளம் இன்பம் துன்பம்
மறந்து வறண்டு கிடக்குதடி...

எப்போதும் ஓடிக்கொண்டு
இருக்கும் நதியை போல...

நம் வாழ்வில்
இன்பம் பொங்கிட...

உன் சந்தேகத்தை
தூக்கி எரிந்து

மீண்டும் என் வாழ்வில்
வந்துவிடடி கண்ணே...

காத்திருக்கிறேன்
எப்போதும் உனக்காக.....முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (8-Sep-20, 6:12 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1053

மேலே