உன்னை மறக்க நினைக்கும் போதெல்லாம் 555

என்னவளே...
நீ விலகி விலகி
செல்லும் போதெல்லாம்...
உன்னை நான்
தொடர்ந்து வந்தேன்...
இன்று நான் விலகி
செல்ல நினைத்தாலும்...
உன்னை தொடர்ந்த நினைவுகள்
என்னை தொடருதடி...
தூங்கும்
நேரத்தில் கூட...
நேரத்தில் கூட...
உன் கொலுசின் ஓசைகள்
என் செவிகளை துளைக்குதடி...
உன்னை மறக்க
நினைக்கும் போதெல்லாம்...
காற்றில் கலந்த
உன் சுவாசம்...
என் சுவாச காற்றாக
என்னுள் செல்லுதடி...
நிலவில்லாத நீலவானம்
இருக்கும் உலகில்...
உன் நினைவுகள் இல்லாத
நாட்கள் மட்டும் என்னில் இல்லையடி.....