கல்லூரியின் கடைசி வாய்ப்பு


இளங்கலையை வென்ற
இளைஞர்களே,

முதுகலையை வெல்ல
முயல்வோர்களே!

காதல்களும் சின்ன சின்ன
மோதல்களும் வந்திருக்கும்,

நட்புகளும் நல்ல நல்ல
பழக்கங்களை தந்திருக்கும்!

காலங்கள் கடந்து விட்டன
போட்டிகளும் துவங்கி விட்டன,

போட்டிஉலகத்தினிலே
போட்டியிட தயாராயிடு!

வேதனைகளை சந்தித்தால்
சாதனைகள் தேடி வரும்,

முயற்சிகள் செய்து முன்னேறு
வெற்றிகள் வலம் வரும் உன்னோடு!!!

எழுதியவர் : Mylai (20-Sep-11, 9:56 pm)
சேர்த்தது : mylaiprabhu
பார்வை : 496

மேலே