எனக்கு நீ என்றும் உயிர் தானடி 555

***எனக்கு நீ என்றும் உயிர் தானடி 555 ***


அழகே...


என்னை எதிரில் கண்டாலும்
தொலைவில் கண்டாலும்...

முந்தி கொள்கிறது
உனக்கு கோபம்...

உன்னுடன் இருக்கும்
உன் தோழிகள்...

அவனை கண்டாலே
ஏனடி கோபம் என்கிறார்கள்...

அவர்களுக்குத்தான்
அது கோபம்...

எனக்கு நீ
என்னை கண்டதும்...

பெண்மைக்குரிய
வெட்கமென்றே உணர்கிறேனடி...

என்னை கண்டாலே
வந்து விடுகிறது கண்ணே...

உனக்கு வெட்கம்
கொண்ட கோபம்...

உனக்கு நான் எப்படி
என்று தெரியாது...

எனக்கு நீ என்றும்
உயிர் தானடி...

கோபம் கொள்ளும்
என்னுயிர் வெண்புறாவே.....முதல் பூ பெ.மணி.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (23-Sep-20, 9:06 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 855

மேலே