நிதர்சனம்

மேகத்தை வார்த்து உன்
தாகத்தை தீர்க்க முடியுமெனில்
மலையும் மரங்களும் எதற்கு

சுவாசித்த காற்றை மீண்டும்
சுவாசிக்க முடியுமெனில்
சுத்திகரிக்கும் இயற்கை எதற்கு

பொழியும் மழையை உன் கரம்
கொண்டு காக்க முடியுமெனில்
நதியும் ஆறும் எதற்கு

பரிதியின் பகலை பாதுகாக்க முடியுமெனில்
நிலவின் வெளிச்சம் எதற்கு

தூசியை கண்கள் நேசிக்குமானால்
இமைகள் உனக்கு எதற்கு

பசியை உன்னால் ரசிக்கமுடியுமெனில்
உணவென்று ஒன்று எதற்கு

ஆக்குதலும் அழித்தலும் அவன் செயலே

தேவைகளும் பூர்த்திகளும் அவனாலே

தேடல் மட்டுமே உன்னாலே

பாதைகளும் பயணங்களும் எல்லோருக்கும் ஒன்றே

பார்ப்பதிலும் எற்பதிலும் மட்டுமே
உங்கள் தூரம் கூடிக்குறைகிறது

எழுதியவர் : இளவல் (28-Sep-20, 11:17 am)
சேர்த்தது : இளவல்
Tanglish : nidarsanam
பார்வை : 119

மேலே