தேர்க் காலில் நசுங்குமோ

#தேர்க் காலில் நசுங்குமோ..?

காற்றினுள் உயிர் சுமந்து
வான் பறந்து வீழும்
பலூன்களுக்கெல்லாம்.
அற்ப ஆயுளே...

வானம் தொட்டு
வானேறுதல் என்பது
எல்லோருக்கும்
வாய்த்து விடுவதில்லை.

வான் புகழ் என்பது
வசதிகளால்
வருவதுமில்லை..

திறமைகளை
தேர்க்காலில் இட்டு
கொல்ல நினைப்பவரை
காணும்போதெல்லாமும்
அவர்களுக்கெல்லாம்
ஓரறிவு உலுத்து விட்டது
என்று கூறிப் போகும்
அசரீரி வார்த்தைகளில்
சிலிர்த்துக் கொள்கிறது உடல்

இரசித்து சிரிக்கிறது
உள்ளம்..
சமயங்களில்
அதரமும் கண்களும்...

தேரிழு ப்போர்
தேரிழு த்துக் கொண்டிருக்கும்
அதே தருணங்களில்
ஒவ்வொரு தேருக்கும்
ஒரு கவிதை
இழுத்துக் கொண்டு விடுகிறேன்

தமிழ் வடம்
திடமாய்த்தான் இருக்கிறது
அதில் அறுபடாமல்
என் கவிதைகள்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (1-Oct-20, 12:36 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 64

மேலே