துளிப்பா அந்தாதி
உலகறிந்த அண்ணல்
உயர்ந்த கரங்களின் வலிமை
அவரே காந்தியடிகள்...!
காந்தியின் ஓவியம் காண்
அறவழி எதுவென அறிவாய் நீ
அவரே பெருந்தலைவர்...!
பெருஞ் சுதந்திரத் தாகம்
சற்றும் தணியவில்லை இன்றும்
பாரத மணித்திரு நாட்டில்...!
நாடெங்கும் அகிம்சை
தூதராய் வந்த தூயவரே
மகாத்மா காந்தியடிகள்...!
காந்தியடிகள் ஒருவரே
இன்றும் வாழ்கிறார் அரசவைகளில்
நிழற்படம் சுவற்றின் மேல்...!
மேலாடையைக் களைந்தார்
பாமர மக்களுக்காய் போராட
நாடெங்கும் திரிந்தார்...!