ஹைக்கூ கவிஞர் இரா இரவி

ஹைக்கூ! கவிஞர் இரா. இரவி !


தந்தது கனி
கல் எறிந்தவனுக்கும்
மரம்!

அரசவை துறந்து
துறவியானார் புத்தர்
துறவிகளுக்கு அரசவை ஆசை வந்தது

உதவி செய்யாவிடிலும்
உபத்திரம் செய்யாதீர்
உழவனுக்கு!

போரை வெறுத்தார் புத்தர்
போரை நடத்திய
பக்தர்கள்!

சிதைத்தது காற்று
கவலையின்றி கட்டியது
அடுத்த கூட்டை குருவி!

அன்பு என்றால்
என்ன என்றார்
அரசியல்வாதி!

தன் முட்டை
குயில் முட்டை
வேறுபாடு அறியாத காகம்!

சின்ன மீன் போட்டு
பெரிய மீன் எடுத்தல்
தேர்தல்!

சேமிக்கும் தேனீ
அபகரிக்கும் மனிதன்
தேன்!

உலக அரங்கில்
கேலிக் கூத்தானது
மக்களாட்சி!

உதிர்ந்த இலை
சருகானது
வருத்தத்தில் மரம்!

இராணுவச் செலவு
செய்யும் வரை
நிலவாது அமைதி!

அழகல்ல
மனிதனுக்கு
தலைக்கனம்!

குறுகிய மனங்களின்
பேராசை
எல்லைச் சண்டை!

யாரையும்
அழித்து விடும்
ஆணவம்!

வராமல் நிற்கிறான்
வருவதாகச் சொல்கின்றனர்
சூரியன்!

நல்லது நினை
நல்லது சொல்
நல்லது நடக்கும்!

சொந்த ஒளி இல்லை
சூரிய ஒளியின் இரவல்
சந்திரன்!

இறந்த பாட்டியை
நினைவூட்டியது
சுருக்குப் பை!

பரபரப்பானவர்களையும்
அமர வைத்தது ஓரிடத்தில்
கொரோனா !

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (1-Oct-20, 9:26 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 222

மேலே