விடை காணா கேள்விகள் 😭😭

செய்த விணை அம்பாய்
என்னைத் தாக்குது...
நீ ஏன் இன்னும்
வாழ்கிறாய் என இதயம்
என்னைக் கேட்டுக் கொல்லுது...
வெக்கம்,மானம்,
சூடு, சுரணை விட்டு
காசுக்காக கால்கள் ஓடுது...
என்னை ஏன் படைத்தாய்
இறைவா என கேட்டிட
நெஞ்சம் துடிக்குது...
தோல்விகள்,ஏமாற்றங்கள்
கண்டு கண்டு மனம்
பட்டுப் போனது....
பட்டுப் போன மனதில்
கனவுகள் மட்டும் வாடாமல்
இன்னும் வாழுது....
மனம் தேடும் கனவை
அடைய முயற்சி பல செய்தும்🤸
துரதிஷ்டம் ஏனோ நிழலாய் துரத்துது🚶
உடல் தொடரும் நிழல் கூட
இருள் வந்தால் விலகும்...
வாழ்வைத் துரத்தும் துரதிஷ்டம்
கஷ்டம் பல நான் கண்டும் இன்னும் விடாமல் தொடருது....🏃🏃

ஏன் இந்த வாழ்வு...?
அதில் ஏன் இத்தனை போராட்டம்..?
எதை நோக்கி என் பயணம்...jQuery17105886357719791027_1641211133825!
அதிலேன் எதிர்பாராத பல வழி மாற்றம்..
செல்லும் வழிகளில்
ஏன் இத்தனை வலிகள்..??

எல்லாம் விதி செயல்
கிரக மாற்ற நிலை எனில்
இறை என்பதெதற்கு...??!!🤔

அதிர்ஷ்டம் ஒன்றுதான் நம் வாழ்வை நிர்ணயக்கும் எனில், விடா முயற்சியும், அழியா திறமையுமெதற்கு....??!!🤔

சக மனிதனின் குறை தீர்ப்பவன்
மனதளவில் கூட காக்க படுவதில்லை..
இங்கு,
கோவில் உண்டியல் நிறப்புவன்
புண்ணியவானாக போற்றப்படுகிறான்

இதுதான் உலக நிலை எனில்
பொதுநலம்...நேசம்..
பரிவு...அன்பு...கருணை
இவை எல்லாம் எதற்கு.??!!🤔

விடை காணா
கேள்விகளுடன் என் பயணம்
முடிவை நோக்கி...🚶🚶🚶

என்றும்...என்றென்றும்....

எழுதியவர் : கிறுக்கன் (13-Oct-20, 6:16 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 146

மேலே