பாடலின் ஜீவனே
![](https://eluthu.com/images/loading.gif)
பாடலின் ஜீவனொன்று
ஏந்தினாயே உன் கண்ணில்
பாலுவே எங்கள் தெய்வம்
பாவம்தான் என்ன செய்தோம்?
உறக்கமென்ன! உயிரே வருக
காற்றுபோல் உந்தன் கீதம்
சுவாசித்தோம் எந்த நாளும்
மன்னனே உந்தன் பாடல்
மனவலி ஆற்றுமே
குழலைப் போல் பாடும் உன்னை
குழந்தையும் போற்றுமே
மீண்டும் அந்த சொர்க்கம் தா
ராகத்தைப் பாடிப் பாடி
சோகத்தை மாற்றினாய்
மண்ணிலே மறைந்ததாலே
மனசுதான் வாடுதே
விண்ணிலே வாழும் உன்னை
விழிகளும் தேடுதே
கண்ணீர் ஆறாய் செல்ல