இதயம் முழுவதும் காதல் மனம்வீசும் 555

***இதயம் முழுவதும் காதல் மனம்வீசும் 555 ***


ப்ரியமானவளே...


வாழ்க்கை என்றால்
என்னவென்று தெரியாத எனக்கு...

நீ உன் காதலை
எனக்கு தந்தாய்...

உழைப்பாளியின் வியர்வைபோல
உயர்வானது எனக்கு உன் காதல்...

ஏழையின்
கண்ணீரைபோல
உண்மையானது...

நான் உன் மீது
கொண்ட என் காதல்...

உன்மீதான என் காதல்
எப்போதும் குறையாதடி...

உன் விழியசைவில்
காதல் மொழி பேசுபவள் நீ...

அன்பு கொண்டு
நெஞ்சம் நிறைந்தால்...

இதயம் முழுவதும்
காதல் மனம்வீசும்...

நான் விம்மி அழுத
இரவுகள் எத்தனையோ...

இலை உதிர் காலமாய்
இருந்த என் வாழ்வில்...

வசந்த
காலமாய் வந்தாய்...

இனி என் வாழ்நாளெல்லாம்
வசந்தம் வீச...

நீ
வேண்டுமடி கண்ணே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Oct-20, 9:28 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 383

மேலே