பெண்ணே

பெண்ணே உன் கண்கள் தீப்பிழம்பாய் இருக்கட்டும் எப்போதும் !
தவறான பார்வை பார்ப்பவனின் கண்களை உன் கனல் பார்வையால் பொசுக்கிவிடு !
அர்த்தமற்ற சமுதாயத்தில் உனக்கு நீதி கிடைப்பது மிக அரிது :
நயவஞ்சகர்கள் உன்னை தற்குறியாய் ஆக்கும் முன்...
நீ அந்த நயவஞ்சகர்களை கழுவில் ஏற்றிவிடு !
உன் கைகள் அதற்கு துணையாகட்டும்...
உன் மனம் அதற்கு வலிமை சேர்க்கட்டும் !
நீ கடல் அலையாய் இல்லாமல்
பொங்கி எழும் சமுத்திரம் என
இந்த உலகிற்கு காட்டிவிடு !
பெண்ணே நீ யாருக்கும் அடிமையும் இல்லை உன்னை அடிமையாக இங்கு யாருக்கும் உரிமையும் இல்லை !

எழுதியவர் : பெண்மை (9-Nov-20, 10:05 am)
சேர்த்தது : பூமணி
Tanglish : penne
பார்வை : 156

மேலே