அவளதிகாரம்

பாவையோ மூழ்கிடும் பதின்மப் பருவம்
சேவையோ றென்புகழ் மகிழும் உருவம்
நாவையோ நீவினால் நவிலுகின்ற அரவம்
தேவையோ மண்ணிலும் இவள்போலு மொருத்தி!,

மலரினும் மெலிதென மலர்ந்திடு மதரங்கள்
உலர்ந்தினும் எளிதென உகந்திடும் தீஞ்சுவை
கலந்திடின் அமுதெனக் கரைந்திடும் செஞ்சுனை
நிலந்தனில் தீண்டிடும் நிலமக ளவளே!,

பொய்தும் உய்த்து பொய்த்தும் உய்த்து
நெய்தும் துயிலா அவளது நினைவில்
மெய்தானென் ரெவருரைத் தாலன்றி காதல்
செய்தாலே வெல்லும் அல்லேல் கொல்லும்.

திருவாய் மொழிவாய் திகைப்பாய் இனியாய்
பருவாய் உதிர்வாய் பகைதனைத் தகர்வாய்
தருவாய் மலர்வாய் தகைசால் மொழியாய்
வருவாய் மனங்கொடா வகைச்செங் கொடியே!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (10-Nov-20, 3:09 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 155

மேலே