வாழ்க்கை இருப்பதுபோல் இல்லாதது

கனவு காண்பதற்கு முன்பு நானோ
என்ன சொல்ல தூங்கவில்லை -கனவு
காணும்போது தூக்கத்தில் நான் அது
நனவென்றே நினைத்து நான், கனவும்
கலைந்தது நானும் கண்விழிக்க, புரிந்தது
நானுறங்கும் முன்னே கனவில்லை, பின்னர்
என்தூக்கம் கலைய கனவுமில்லை; இடைப்பட்ட
வேளையில் மட்டுமே கனவு நனவுபோல்
மனித வாழும் இப்படித்தானோ பிறக்கும்முன்
அவனில்லை இறக்கையிலே அவனில்லை அவன்
இருந்தது இடைப்பட்ட வேளையில் கனவுபோல
காணாமலும் கண்டும் காணாமல் போகும்
அதுவே இந்த அழியும் உடல் ஆனால்
என்றும் இருப்பது 'ஜீவன்' ஒன்றே
கர்ம பலனொப்ப அது உடலத்தேடும்
இருப்பது போல் இல்லாதது வாழ்க்கை
' கீதோபதேச' சாரம் இது பகவான்
காதோடு சொன்னது அர்ஜுனனுக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-20, 9:06 pm)
பார்வை : 468

மேலே