BHARATHIYAR

பாரதியார்

"சிறு கவிதை ஒன்று
துளிர் விட்டது,
தனி கவிதையாய் அது
வேர் விட்டது,
புத்தம் புது கவிதையாய் பொலிவுற்றது,
மின்னும் பொற் கவிதையாய் ஜொலிப்புற்றது,
அரும்பெரும் கவிதையாய்
ஒளிர் விட்டது.

என்ன ஒரு கொடுமை!

சொப்பனத்தில் தோன்றிய கவிதையாய் நிறைவுற்றது.

அந்தப் பைந்தமிழ் கவிதை,

சுதந்திரத்தை மட்டுமே சுவாசித்தது,
நாட்டையும், தேசியத்தையும் நேசித்தது,
ஜாதி, மத அவலங்களை தூஷித்தது,
மனித குல மேம்பாட்டிற்கு யோசித்தது,
சமத்துவத்தை மட்டுமே
யாசித்தது,
அன்பும் அறிவுமே சொத்து என வாதித்தது,

என்ன ஒரு கயமை!

அந்த அற்புதத்தை போற்ற, காப்பாற்ற காலம் (ன்) தவறி விட்டது,
இனி எங்கும் காண முடியாத
அதிசயத்தை ஞாலம் தவற விட்டது."

எழுதியவர் : Lakshya (3-Dec-20, 7:15 am)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 46

மேலே