சுகம் வருமே

மலர்ந்திடும் பூக்கள் மணம்தரும் சோலை
மயக்கிடும் புதுமையுடன்
புலர்ந்திடும் காலைப் பொழுதெனும் தேரில்
புவிதனில் பரிதியெழச்
சலசலக் கின்ற சலத்துளி ஓடிச்
சதிசொலு மினிமையொடு
கலகல வென்று கவிதைகள் பாடிக்
களிப்புறச் சுகம்வருமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Dec-20, 1:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : sugam varume
பார்வை : 381

மேலே