ஹைக்கூ
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
ஏழைகளின்
பிறந்த நாள் கேக்
சாக்லெட்
❎❎❎❎❎❎❎❎❎❎❎
கிராமத்தில் கூட
இப்போது கேட்பதில்லை
மாட்டுவண்டி சப்தம்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
பெண் பார்க்க வந்தார்கள்
மாப்பிளைக்கு முதன் முறை
பெண்ணுக்கு முப்பதாவது முறை
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
நனையாமல்
குளத்துக்குள் இருக்கிறது
நிலா
🈯🈯🈯🈯🈯🈯🈯🈯🈯🈯🈯
கடிதம் எழுதும் பழக்கம்
இன்றும் இருக்கிறது
பள்ளி கட்டுரையில் மட்டும்
*கவிதை ரசிகன்*
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️