அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை

அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை
********
தமிழே நீயொரு இனியகலை- உனைத் தழுவிக்
கொண்டாடும் கவிதை அலை

அமிழ்தாய் இனித்திடும் உனது சுவை- அதை
ஆழ்ந்து சுவைப்பது எனது நிறைய நிறை

பண்ணோடு சேர்வது உனது அசை- அதைப் புண்ணின்றி காப்பது எனது இசை

அரங்கத்து ஏறும் உனது நடை- அங்கு கரங்கெனச் சுழலும் ஓசை அலை

சங்கம் கண்டது உனது தளை- அதில்
அங்கம் வகிப்பது எனக்கு நிறை

எழுதியவர் : சக்கரை வாசன் (3-Jan-21, 5:58 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 98

மேலே