கொஞ்சி பேசும் உன் விழிகள் போதுமடி 555

***கொஞ்சி பேசும் உன் விழிகள் போதுமடி 555 ***
என்னுயிரே...
உன்னிடம் நான்
பேச நினைத்து...
என் உதடுகள் சுமந்து வந்த
வார்த்தைகள் எல்லாம்...
உன் விழிகளை கண்டதும்
மறந்துவிடுகிறது என் இதழ்கள்...
கைபேசியில் நாம்
கொஞ்சி பேசிட...
கடிகார முட்களும்
வேகமாக நகருதடி...
நள்ளிரவாகியும் மனமில்லை
எனக்கு கைபேசி வைத்துவிட...
என் விழிகளெல்லாம்
உறக்கம் கொள்ள...
கண்ணை மூடி
உறங்க நினைத்தாலும்...
முடியாமல் தொடர்கிறது
நம் பேச்சுக்கள் தினம்...
தினம் கைபேசியில் பேசும்
வார்த்தைகளை எல்லாம்...
நேரில் உன்னை
காணும் போது...
என் இதழ்கள் பேசிவிட
வேண்டுமடி
வேண்டுமடி
உன்னுடன் என்னுயிரே.....