அலுவலகத்துக்கு பேருந்தில் கிளம்பும் போது

அலுவலகத்துக்கு பேருந்தில் கிளம்பும் போது

அது நகர
பேருந்துதான்
ஆனால் நகர
மறுத்து நிற்கிறது

ஓட்டுநர் வட்டு சுழலை
ஒரு கையால்
பிடித்து மறு கையால்
தூக்கி கம்பியை
இப்படியும் அப்படியுமாக
ஆட்டி இரு காலையும்
மேலும் கீழுமாக
அழுத்தி பார்க்கிறார்

உறுமல் சத்தம்
மட்டும் போட்டு
விட்டு மெளனமாய்
நின்று விடுகிறது

பின்னால் திரும்பி
பயணிகளை
பரிதாபமாய் பார்க்க

உட்கார்ந்தும், நின்றும்
அவஸ்தையாய் நெளிந்து
கொண்டிருந்த பயணிகள்
அதைவிட பரிதாபமாய்
நடத்துனரை பார்க்கிறார்கள்

பயணசீட்டு பணத்தை
திரும்ப தருவாரா?
இல்லை அடுத்த
வண்டியிலாவது நம்மை
ஏற்றி விடுவாரா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Jan-21, 3:31 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 30

மேலே