யார் யாருக்கு சொந்தம் 🤔😳

ரசித்து அணியும் துணியும்
' கந்தல்' ஆகிப்போகும்..
ருசிது உண்ணும் உணவும்
' மலம் ' ஆகி வெளியேறும்..
கோடி கொடுத்து தடுத்தாலும்
மின்னிய தோல்கள் சுருங்கி,
முடி உதிர்ந்து,கண் இருண்டு,
முதுமை ஓர் நாள் தீண்டும்..
தேடி தேடி சேர்த்த சொத்து
' வாரிசு 'இடம் போகும்...

ஓடி ஆடி உழைத்த உடம்பு
ஓர் நாள் 'உயிரை'விட்டு தரையில் கிடக்கும்..
பெற்றோர் வைத்த பெயர் அன்று
'பிணம் ' என மாறும்...
கூடி வாழ்ந்த மனைவி என்ன
கூடவே'வா 'சாகும்..jQuery17107835092101243015_1612287981752
உயிர் கொடுப்பேன் என்று
சொன்னதெல்லாம் ' ஊமையாக ' நிக்ககும்....!!!
சொந்தம் என்று வந்தவரெல்லம்
வந்ததற்கு - கடனே - என அழுதுவிட்டு போகும்....

நீ வந்த இந்த உலகில்
'அவன் 'தந்த இந்த உடம்பில்
உனது என்பது
ஏதுடா
சில காலம் தங்கி செல்லும்
வழிப்போக்கனே...
இதில்
புகழ் என்ன..jQuery17103190432264965919_1640985176960
பதவி என்ன..

எழுதியவர் : கிறுக்கன் (2-Feb-21, 11:16 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 263

மேலே