என்னுள் நுழைந்த காதல் செந்தேனே

உறக்கம் திறக்கின்றேன்/.
உணவை வெறுக்கின்றேன் /
உரையாடலைக் குறைக்கின்றேன்./
உதடுகளால் சத்தமின்றி
உன்னை அழைக்கின்றேன்./
இதற்குப் பெயர்தான் காதலா ....?

அழகைப் பெருக்குகின்றேன் /
ஆடையை நாகரிக முறைக்கு மாற்றுகின்றேன்./
அதிகமாய் காதல் கீதம் இசைக்கின்றேன்./
அந்தப் புரம் எந்தப் புரம் பார்த்தாலும்./
அழகே உன் உருவம் காண்கின்றேன்/
இதற்குப் பெயர்தான் காதலா ....?

காமத்து வரிகளைப் படிக்கின்றேன்./
காமக் கவிதை கிறுக்குகின்றேன்./
காணும் போதெல்லாம் உன்னை ரசிக்கின்றேன்./
காணாத போது என்னையே மறக்கின்றேன்./
இதற்குப் பெயர்தான் காதலா .....?

என்னுள் மத்தாப்பாய் உன் முகமே /
என் இதயறை உனது இருப்பிடமே /
அனைத்து நரம்பிலும் உன் நினைவால் /
எழும் மோகத்தினாலான குருதியின் ஓட்டமே /
என் ஆருயிரே இதற்குப் பெயர்
தான் காதலா?
என்னுள் நுழைந்த காதல் செந்தேனே /

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-Feb-21, 8:21 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 202

மேலே