குப்பையில் பிணத்தில் மலத்தில்

ஆணில்லை பெண்ணில்லை கற்றறிந்தோர்களின்
அறிவியலாலும் உலகில் பாகுபடுத்தப்படவில்லை
காற்று நீர் நெருப்பு பூமி என்ற சிறப்பு பூதங்களை

எரிவாயு தங்கம் வெள்ளி வைரம் வைடூரியம் இவைகள்
இனம் பிரிவு மொழி தொழில் நாடு உயர்வு தாழ்வென
எவைகள் இவைகளை பிரித்தாண்டு மூடிசூடுமோ

பணம் என்ற வேந்தனே பொதுவில் தலைவனாம்
பாலின மோதல்களும் பதைபதைக்கும் கொலைகளும்
பல பல வன்முறைகளும் பல வகையில் பெருகவே

பணமென்ற ஒன்றின் மேல் பாசம் வந்ததே காரணமாம்
உரிமை பெருமை உயர்வு தாழ்வு மலை மடுவு காடு மேடு
இளையோர் முதியோர் குழந்தை என எதுவென்ற போதிலும்

ஓர் கதிர் இரு பொழுது மும்மூச்சி நாற்புரம் ஐந்நிலம்
அறுசுவை ஏழ்நாட்கள் எட்டு நிலை ஒன்பது துவாரம்
இவைகளை நீக்க அழிக்க மாற்ற மறக்க காரிணியாம்

குப்பையில் பிணத்தில் மலத்தில் கோயிலில்
பால் மொழி இன பேதம் பார்க்க இயலாத திருவாம்
பலர் கையில் உழன்றாலும் என்றும் குளிக்கா பணமேயாம்.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Feb-21, 8:39 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 40

மேலே